
உலகின் மிக மூத்த வாழும் மனிதராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பிரித்தானியாவின் எத்தேல் கேட்டர்ஹாம் (Ethel Caterham) தனது 117 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.
1909 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 21 ஆம் திகதி பிறந்த இவர், இங்கிலாந்தின் சரே பகுதியில் உள்ள பராமரிப்பு இல்லத்தில் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இந்த பிறந்தநாளைக் கொண்டாடினார்.
இதன் மூலம் 117 வயதை எட்டிய முதல் பிரித்தானியர் என்ற வரலாற்றுச் சாதனையை கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் அவர் படைத்துள்ளார்.
இரண்டு உலகப் போர்களையும் கடந்து வாழ்ந்த இவர், தனது 110 ஆவது வயதில் கொவிட்-19 தொற்றிலிருந்தும் மீண்டு வந்துள்ளார்.
அத்துடன், தனது 18 ஆவது வயதில் 1927 ஆம் ஆண்டு இந்தியாவிற்குத் தனியாகப் பயணம் செய்து அங்கு ஒரு பிரித்தானியக் குடும்பத்தில் குழந்தைகள் பராமரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.