
நடிகை திரிஷா குறித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சென்னை நீலாங்கரை இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நடிகை திரிஷா குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்ததுடன் உதயநிதிக்கு எதிராக மாநிலம் முழுவதும் த.வெ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆபாசமாக பேசியதாக உதயநிதி மீது 6 பிரிவுகளின் கீழ் தஞ்சை பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தஞ்சை பொலிஸார் உதயநிதிக்கு எதிராக சட்ட நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் உதயநிதி தரப்பில் சென்னை மேல் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
அவசர வழக்காக விசாரிக்க கோரிய முறையீட்டை ஏற்று நண்பகல் 12 மணிக்கு விசாரிப்பதாக சென்னை மேல் நீதிமன்ற நீதிபதி தெரிவித்திருந்தார்.
அதுவரையில் உதயநிதி விவகாரத்தில் நடவடிக்கை வேண்டாம் எனவும் பொலிஸாரிடம் தெரிவிக்குமாறு நீதிபதி அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் நீலாங்கரை இல்லத்தில் வைத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்து தஞ்சை மாவட்ட பொலிஸார் அழைத்து சென்றனர்.
முதலமைச்சர், நடிகை குறித்து இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசியதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது செய்யப்பட்டுள்ளார்.
நண்பகல் 12 மணி வரை கைது செய்ய வேண்டாம் என மேல் நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்திய நிலையில் உதயநிதி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது