
புதிய மோட்டார் சைக்கிள் பதிவுகள் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் நாட்டின் ஐந்து மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் துஷார இந்துனில் பெர்னாண்டோ தெரிவித்தார்.
தேவையான ஆரம்பகட்ட விழிப்புணர்வுகளை மேற்கொண்டதன் பின்னர், யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை, அனுராதபுரம், குருநாகல் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்ட அலுவலகங்களில் இவ்வாறு புதிய மோட்டார் சைக்கிள் பதிவு ஆரம்பிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கூறினார்.
ஆரம்பக் கட்டத்தில் மோட்டார் சைக்கிள் பதிவு மட்டுமே இவ்வாறு ஆரம்பிக்கப்படும் என்றும், பின்னர் அது அனைத்து மோட்டார் வாகனப் பதிவுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.