
சர்வதேச T20 கிரிக்கெட் வரலாற்றில், முழு உறுப்புரிமை பெற்ற இரு நாடுகளுக்கு இடையிலான போட்டியில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை இந்திய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அபிஷேக் சர்மா இன்று (17) படைத்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போட்டியில், வெறும் 30 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார்.
ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா, 11 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 108 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டமிழந்தார்.
சஞ்சு சாம்சனுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 9.5 ஓவர்களில் 142 ஓட்டங்களைப் பகிர்ந்துகொண்டார்.
இதற்கு முன்னர், முழு உறுப்புரிமை பெற்ற நாடுகளுக்கு இடையிலான போட்டிகளில் அதிவேக T20 சதம் அடித்த வீரர் என்ற சாதனையை நியூசிலாந்தின் ஃபின் அலன் (33 பந்துகளில்) தக்கவைத்திருந்தார்.