
நீதிமன்றத்தில் ஆஜராகாததால் கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்னவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் கசுன் காஞ்சன தசநாயக்க இன்று (28) உத்தரவிட்டுள்ளார்.
தனது பிள்ளைக்கு பராமரிப்பு தொகை வழங்குமாறு கோரி பெண் ஒருவர் தாக்கல் செய்திருந்த முறைப்பாடு தொடர்பான வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் அவருக்கு எதிராக இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சாமிக்க கருணாரத்ன தற்போது ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பில் பங்கேற்றுள்ளார்.
எனினும், அந்த காரணத்தினால் வழக்கில் ஆஜராக முடியாதது தொடர்பில் நீதிமன்றத்திற்கு முறையாக அறிவிக்காததால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மீண்டும் ஜனவரி 04ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.