
நடிகர் கவின் தனது வாழ்க்கை தற்போது இரட்டிப்பு மகிழ்ச்சியால் நிறைந்துள்ளதாக தனது எக்ஸ் தள பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.
தனது பதிவில் கடவுளுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ள மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளதாக தெரிவித்துள்ள கவினின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.