
இளையராஜாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என சரிகம நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
நீதிமன்ற தடையை மீறி குறிப்பிட்ட சில பாடல்களை இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்து பயன்படுத்துவதாக சரிகம நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது.
எனவே பதிப்புரிமை உத்தரவை மீறியதாக இளையராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரியும், இளையராஜாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.