
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரில் பங்கேற்பதற்காக 15 பேர் கொண்ட குழாம் பெயரிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணியும் பங்கேற்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள் மற்றும் ஒருநாள் முக்கோணத் தொடர் ஆகியவற்றில் பங்கேற்பதற்காக இலங்கை ஆண்கள் தேசிய அணி ஒக்டோபர் 4 ஆம் திகதி பாகிஸ்தான் புறப்படவுள்ளது.
இருபதுக்கு இருபது தொடர் ஒக்டோபர் 9, 11 மற்றும் 13 ஆம் திகதிகளில் ராவல்பிண்டியில் நடைபெறும்.
ஒருநாள் முக்கோணத் தொடர் ஒக்டோபர் 18 முதல் 31 வரை நடைபெறும், அதே நேரத்தில் டெஸ்ட் தொடர் நவம்பர் 9 ஆம் திகதி தொடங்கும்.
குசல் மெண்டிஸ் அணியின் தலைவராகச் செயற்படவுள்ளதுடன், அறிமுக வீரரான சினேத் ஜயவர்தனவும் இதில் சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது
இதேவேளை வியாஸ்காந்தும் உள்வாங்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது