
புதிய எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைவாக பஸ் பயணக் கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை உயர்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.