
சர்வதேச மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு நாளை (03) நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
மதுவிலக்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மது அருந்துவதைத் தவிர்ப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துவதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 03 ஆம் திகதி சர்வதேச மதுவிலக்கு தினம் கடைபிடிக்கப்படுகிறது.