
அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்பனை செய்த உணவகம் ஒன்றுக்கு 10 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பம்பலப்பிட்டி பகுதியிலுள்ள உணவகம் ஒன்றுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த நிறுவனம் குற்றம் சுமத்தப்பட்டதை அடுத்து, குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள குடிநீரை, உணவகங்கள் அல்லது ஹோட்டல்கள் உட்பட எந்தவொரு விற்பனை நிலையத்திலும் அந்த விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியாது என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.