
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தன்னை கைது செய்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைப்பதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த மனு தொடர்பான விடயங்களை பரிசீலித்த பின்னர் அதன் கட்டளையை அறிவித்த மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹான்த அபேசூரிய மற்றும் சரத் திஸாநாயக்க ஆகியோர அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.