
மக்கள் விடுதலை முன்னனியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
பாரதிய ஜனதாக் கட்சியின் (BJP) அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த விஜயத்தின் நோக்கம், இரு நாடுகளின் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான உறவுகளையும் பரஸ்பர புரிதலையும் மேலும் வளர்த்தெடுப்பதாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது, இலங்கைப் பிரதிநிதிகள் குழு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்துள்ளதோடு, இதன்போது இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது மற்றும் பிராந்திய அபிவிருத்தி தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தியாவின் "அயல்நாட்டிற்கு முதலிடம்" (Neighbourhood First) கொள்கை மற்றும் "மகாசாகர்" (MAHASAGAR) தொலைநோக்கின் கீழ் இலங்கையின் முன்னேற்றம் மற்றும் செழிப்பிற்காக எப்போதும் தோள் நிற்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.