
10 மாதங்களுக்குப் பிறகு இன்று (02) முதல் மீண்டும் மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படுகின்றன.
கொழும்பில் இருந்து பேராதனை மற்றும் கம்பளை வரையான ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்தார்.