
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக முன்னெச்சரிக்கை பரிசோதனைக்காக இலங்கை கிரிக்கெட் வீரர் தினேஷ் சந்திமால் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
நான்காம் நாள் ஆட்டத்தின் போது பந்தை எல்லைக்கோட்டுக்குள் தடுக்க முயன்றபோது பாய்ந்து விழுந்ததில் அவரது வலது தோள் மற்றும் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டது.
மைதானத்திலேயே இலங்கை அணியின் உடற்பயிற்சி நிபுணர் மற்றும் மருத்துவரால் அவர் பரிசோதிக்கப்பட்ட பின்னர், மேலதிக பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த ஸ்கேன் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கேன் முடிவுகள் கிடைத்த பின்னர் சந்திமாலின் உடல்நிலை தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.