
ஸ்கொட்லாந்தில் நடைபெற்று வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டி 2026 தொடரில், இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க 82.84 மீற்றர் தூரம் ஈட்டியை எறிந்து தகுதிச்சுற்றில் முதல் இடத்தைப் பெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
சர்வதேச அரங்கில் இந்தாண்டு தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ருமேஷ் தரங்க, பதக்கம் வெல்லும் முன்னணி வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
இப்போட்டியில் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவர்களான இந்தியாவின் நீரஜ் சோப்ரா மற்றும் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் ஆகியோரும் போட்டியிட்டனர்.
அங்கு நீரஜ் சோப்ரா 79.61 மீற்றர் தூரம் எறிந்து 5ஆவது இடத்தையும், நதீம் 78.63 மீற்றர் தூரம் எறிந்து 7ஆவது இடத்தையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, மற்றொரு இலங்கை வீரரான சுமேத ரணசிங்க தகுதித் தூரத்தை எட்டத் தவறியதால், இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற முடியவில்லை.