
சபாநாயகரை எதிர்த்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 44 பேர் கையொப்பமிட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.
சபாநாயக ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக சுமார் 50 குற்றச்சாட்டுகள் இந்தப் பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ளன.
தவறான நடத்தை, அரச சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்தியமை, நிதி முறைகேடுகள், நலன் முரண்பாடுகள் மற்றும் பாராளுமன்ற நடைமுறைகளை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இதில் உள்ளடங்குகின்றன.
பாராளுமன்ற நடவடிக்கைகளைக் கையாள்வதில் பாரபட்சமான மற்றும் ஜனநாயக விரோதமான அணுகுமுறையை சபாநாயகர் பின்பற்றுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள எதிர்க்கட்சியினர், அவர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.