
ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதை அறிந்து உற்சாகமடைந்த இலங்கைப் பிரஜை ஒருவர், அவர்களுடன் ரஷ்ய மொழியில் ஆர்வத்துடன் உரையாடியுள்ளார்.
ரஷ்யாவின் RT ஊடகம் வெளியிட்ட காணொளியில் இடம்பெற்ற அவர், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் தாமாகவே ரஷ்ய மொழியைக் கற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
உரையாடலின்போது மொஸ்கோ, மர்மான்ஸ்க் உள்ளிட்ட ரஷ்ய நகரங்களின் பெயர்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது ரஷ்ய மொழித் திறனையும் புவியியல் அறிவையும் கண்டு சுற்றுலாப் பயணிகள் வியப்படைந்துள்ளனர்.
இந்தச் சந்திப்பு தொடர்பான காணொளி இணையத்தில் பரவி, அவருடைய சுயகற்றல் மொழித் திறன் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.