
வரட்சியான காலநிலைக்கு நிவாரணம் மற்றும் மழையை வேண்டி நடத்தப்பட்ட மத வழிபாட்டு நிகழ்வின் அங்கமாக, இலங்கை விமானப்படை Y-12 ரக விமானத்தைப் பயன்படுத்தி நாடு முழுவதும் ஆசீர்வதிக்கப்பட்ட பிரீத் தீர்த்தத்தைத் தெளித்துள்ளது.
வரட்சி நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், வனவிலங்குகள் மற்றும் சுற்றாடலின் நலன் கருதி இந்த பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.