
கடந்த சில மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி கேகாலை மாவட்டத்தின் மாலிபொட பகுதியில் பதிவாகியுள்ளதுடன், அந்த அளவு 103.5 மில்லிமீட்டர் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேபோல், காலி மாவட்டத்தின் தெல்வல பகுதிக்கு 93.5 மில்லிமீட்டரும், குருதியபொத்த தேயிலை தொழிற்சாலை பகுதிக்கு 87.5 மில்லிமீட்டரும் மழைவீழ்ச்சி கிடைத்துள்ளது.
இதற்கு மேலதிகமாக, களுத்துறை மாவட்டத்தின் நேபோட பகுதியில் 83.0 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதனிடையே, நாடு முழுவதும் நிலவும் தீவிர தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழையினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை குறைத்துக் கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.