
நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், காலி மாவட்டத்தின் நாகொட, களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர, கண்டி மாவட்டத்தின் பச்பாகே கோரளை, கேகாலை மாவட்டத்தின் தெரணியகல மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல, இரத்தினபுரி, குருவிட்ட, நிவித்திகல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட மக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இந்த எச்சரிக்கை இன்று (20) மாலை 7.00 மணி முதல் நாளை மாலை 7.00 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.