
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) புதிய தவிசாளராக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏறாவூர் பகுதியில் நடைபெற்ற கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எந்தவித எதிர்ப்புமின்றி ஏகமனதாக இந்த நியமனம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுமார் 24 ஆண்டுகளாக மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, 2019 ஜனவரி 2 முதல் ஜூன் 3 வரை கிழக்கு மாகாண ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும், நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அமைச்சுப் பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.