
முச்சக்கர வண்டி பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவதற்கு அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தொழில்சார் கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.
பாடசாலையை விட்டு வெளியேறும் இளைஞர்கள் உடனடியாக முச்சக்கர வண்டி சாரதி தொழிலுக்குள் நுழைவதைத் தவிர்த்து, அவர்களைக் கல்வி மற்றும் தொழில்முறை பயிற்சிகளை நோக்கி வழிநடத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
இது குறித்துப் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், "முச்சக்கர வண்டி தொழிலில் நுழைவதற்கான வயதை 40 ஆக உயர்த்த எதிர்பார்த்துள்ளோம். இளைஞர்கள் பாடசாலையை விட்டு வெளியேறியவுடனேயே முச்சக்கர வண்டியை வீதிக்குக் கொண்டுவரக் கூடாது. அதனால்தான் நாங்கள் கல்வித் துறையில் மாற்றங்களைச் செய்து வருகிறோம்," எனக் குறிப்பிட்டுள்ளார்.