
பாணந்துறை சலிந்துவின் தகவலின் அடிப்படையில் துபாயில் சிக்கிய “வனாத்தே சது”
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய சகாவாகக் கருதப்படும் அவிஷ்க மதுஷான் அபேகுணவர்தன எனும் “வனாத்தே சது” என்பவர் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாய் பாதுகாப்புப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள பாணந்துறை சலிந்து மற்றும் தருண் ஆகியோர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.