
நாட்டின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் பிற்பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.