
இலங்கை இசைத்துறைக்கு அளப்பரிய பங்காற்றிய சிரேஷ்ட பாடகி நந்தா மாலினி காலமானார்.
தனது 83 ஆவது வயதில் அவர் இன்று காலமானார்.
1943 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் திகதி அளுத்கம, லெவந்தூவையில் பிறந்த அவர், தனது இளமைப் பருவத்தில் கொழும்பு கொட்டாஞ்சேனை ஸ்ரீ குணானந்த வித்தியாலயத்தில் கல்வி பயின்றார்.
அங்கு ஆசிரியையான டி.என். மார்கரட் பெரேராவின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை வானொலியில் கருணாரத்ன அபேசேகரவின் “லமா மண்டபய” (சிறுவர் மண்டபம்) நிகழ்ச்சியில் இணைந்தார்.
அதன் மூலம் “புது சாதூ” என்ற பாடலைப் பாடி, தனது இசைப் பயணத்தை ஆரம்பித்தார்.