
இலங்கையில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, பாடசாலைகளை நடத்துவது குறித்த தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
இன்று காலை 9.00 மணி நிலவரப்படி, மாகாண அதிகாரிகளால் கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள தகவலின்படி:
மத்திய மாகாணத்தில் 35 பாடசாலைகள், சபரகமுவ, தென் மற்றும் மேல் மாகாணங்களில் தலா ஒரு பாடசாலை வீதம், ஒட்டுமொத்தமாக 38 பாடசாலைகள் மூடப்படவுள்ளன.
மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், உள்ளூர் வானிலை மாற்றங்களுக்கு ஏற்ப உடனுக்குடன் முடிவுகளை எடுக்கவுமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.