
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டுள்ளது.
போதுமான புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலை தடுக்கத் தவறிய குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.
இவ்வழக்கில் 2022 ஆம் ஆண்டு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு, இரு பிரதிவாதிகளையும் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்ய தீர்மானித்திருந்தது.
எனினும், அந்த தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீடு தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில், வழக்கில் பிரதிவாதிகளின் சாட்சிகள் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன.