
வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களுடன், இரத்தினபுரி, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
நாட்டைச் சூழ்ந்துள்ள தீவிரமான தென்மேற்கு பருவக்காற்று நிலைமை காரணமாக, குறித்த பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.