
நிலவும் மோசமான வானிலை காரணமாக, மறு அறிவிப்பு வரும் வரை பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகள் மற்றும் தேர்வுகளை தற்காலிகமாக நிறுத்த பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
இருப்பினும், பல்கலைக்கழகத்தின் அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களுக்கு பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது:
பாதுகாப்பாக சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடிய மாணவர்கள் செல்லலாம்.
மோசமான வானிலை காரணமாக வீடு திரும்ப முடியாத மாணவர்கள், சரஸவி மெதுர விடுதியைத் தவிர மற்ற பல்கலைக்கழக விடுதிகளில், விடுதி நிர்வாகத்திற்கு அறிவித்து தங்கலாம்.
ஆபத்தான தனியார் தங்குமிடங்களில் வசிக்கும் மாணவர்கள் பாதுகாப்பிற்காக பல்கலைக்கழக விடுதிகளுக்கு வர விரும்பினால், அவர்களை ஏற்று தேவையான பதிவுகளை மேற்கொள்ளுமாறு விடுதி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எந்த மாணவரையும் விடுதிகளை விட்டு வெளியேறுமாறு கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் பல்கலைக்கழகம் வலியுறுத்தியுள்ளது.
வானிலை இயல்பு நிலைக்கு திரும்பும் வரை, பல்கலைக்கழக சமூகத்தினர் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி எச்சரிக்கையுடன் செயல்படுமாறும் பேராதனை பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.