
புதிய ஏற்றுமதியாளர்கள் 1,000க்கும் அதிகமானோர் இலங்கையின் ஏற்றுமதி துறையில் இணைந்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவிக்கையில், தொழில்முனைவோரை ஏற்றுமதியாளர்களாக மாற்றுவதற்கான பயிற்சி திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஏற்றுமதியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.