
முதியோர் சனத்தொகை என்பது இலங்கையில் அதிகரிப்பை பதிவு செய்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கையின் சனத்தொகையில் 12.3 சதவீதமானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்துள்ளனர்.
பல அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போன்று வளர்ந்து வரும் நாடான இலங்கையிலும் முதியோரை பராமரிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இயங்குகின்றன
சுகாதாரப் பராமரிப்பு, காப்புறுதி, சேமிப்புத் திட்டங்கள், என்பன முதியோரை சென்றடைகின்றன.
முதியோர் சனத்தொகை அதிகரிப்பைச் சுமையாகக் கருதாமல், அவர்களின் அனுபவம் மற்றும் திறன்களைப் பயன்படுத்தி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்பாக மாற்றுவதே சிறந்ததாகும்