
மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
குறித்த கடல் பகுதிகளில் ஏற்கனவே மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதுகாப்பான கடல் பகுதிகளை நோக்கி நகருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் அறிவித்தல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு மீன்பிடி மற்றும் கடற்படை சமூகத்திடம் கோரப்பட்டுள்ளது.
வட அந்தமான் தீவுகளைச் சுற்றியுள்ள வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.
இன்று (25) வங்காள விரிகுடாவின் கிழக்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு கடல் பகுதிகள் ஊடாக நகர்ந்து, தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன.
மேலும் மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, நாளை காலையளவில் சூறாவளியாகவும் (Cyclone), நாளை மறுதினம் காலையளவில் வங்காள விரிகுடாவின் மேற்கு-மத்திய கடல் பகுதியை ஒட்டி பலத்த சூறாவளியாகவும் தீவிரமடைவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிடைத்துள்ளது.