
நாட்டில் உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை தடையின்றித் தொடரும் வகையில், அடுத்த மூன்று நாட்களில் 350,000 எரிவாயு சிலிண்டர்களை சந்தைப்படுத்தவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
3,900 மெற்றிக் தொன் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிவந்த 'கொரிந்தியன்' எனும் கப்பல் நேற்று (22) இலங்கை வந்தடைந்ததுடன், அன்றைய தினமே இறக்கும் பணிகளும் தொடங்கப்பட்டன.
இந்த புதிய கப்பல் வருகை மூலம், நுகர்வோர் எவ்வித தடையுமின்றி வழமைபோல் எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள முடியும் என லிட்ரோ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
நாட்டில் எரிவாயு விநியோகம் வழமையான மட்டத்திலேயே பேணப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விநியோகம் வழமைபோல் தொடரும் என்பதால், பொதுமக்கள் யாரும் தேவையற்ற முறையில் எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கிவைக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.