
வட அந்தமான் தீவுகளைச் சுற்றியுள்ள வங்காள விரிகுடாப் பகுதியில் காணப்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் அதே பகுதியில் நிலைகொண்டு, இன்று (24) ஒரு குறைந்த அழுத்த மண்டலமாக வளர்ச்சியடையக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல் - வடமேல் திசையில் நகர்ந்து மேலும் வலுவடைந்து, ஒக்டோபர் 25 ஆம் திகதியளவில் ஒரு தீவிர குறைந்த அழுத்த மண்டலமாகவும் ஒக்டோபர் 26 ஆம் திகதி காலையளவில் வங்காள விரிகுடாவின் மேல்-மத்திய பகுதியில் ஒரு சூறாவளியாகவும் (Cyclonic Storm) மாறுவதற்குக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.
இத் தொகுதியால் இலங்கைக்கு நேரடிப் பாதிப்பு எதுவும் இல்லை என்றபோதிலும், இத் தொகுதியை நோக்கிச் செல்லும் காற்று நாட்டின் ஊடாகக் கடந்து செல்வதால், நாட்டின் தென்மேற்குப் பகுதியில் எதிர்வரும் சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சபரகமுவ, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பின்னர் மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலைமை காணப்படலாம்.