
இந்தியாவின் டெல்லியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவர் தனக்குத் தானே தீ வைத்து உயிரை மாய்த்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்த இந்திய பொலிஸார் மாணவி பெற்றோல் ஊற்றி தனக்கு தானே தீ வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரியவருகிறது.
மாணவியின் பாடசாலை பையில் இருந்து சில சந்தேகத்திற்கிடமான பொருட்களையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை டெல்லி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.