
திடீர் சுகயீனம் காரணமாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் முற்றிலும் போலியானவை என ஜனாதிபதி அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுபோன்ற போலியான தகவல்களால் மக்கள் திசைதிருப்பப்பட வேண்டாம் எனவும், உத்தியோகபூர்வ மூலங்கள் ஊடாக உறுதிப்படுத்தாமல் சரிபார்க்கப்படாத செய்திகளைப் பகிர்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.