
உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட மதமாக இருக்கும் கிறிஸ்துவத்தை பின்னுக்குத் தள்ளி, 2035 ஆம் ஆண்டுக்குள் இஸ்லாம் மதம் முதலிடத்தை பிடிக்கும் என்று ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
“உலகில் உள்ள மதங்களின் எதிர்காலம்” என்ற தலைப்பில் அமெரிக்காவைச் சேர்ந்த பியூ ஆராய்ச்சி மையம் (Pew Research Center) ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
உலகிலுள்ள மற்ற முக்கிய மதங்களைக் காட்டிலும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
2020 - 2025 காலகட்டத்தில், ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு சராசரியாக 3.1 குழந்தைகளும், ஒரு கிறிஸ்துவ பெண்ணுக்கு சராசரியாக 2.5 குழந்தைகளும் பிறந்துள்ளது. மற்ற அனைத்து மதங்களைச் சேர்ந்த பெண்களைப் பொறுத்தவரை, இந்த சராசரி ஒரு பெண்ணுக்கு 1.6 குழந்தைகளாக உள்ளது.
அடுத்த 50 ஆண்டுகளில், அதாவது 2070 வரையிலான காலகட்டத்தில், இயற்கையான மக்கள் தொகை மாற்றத்தின் அடிப்படையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 160 கோடியும், கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை 79.2 கோடியும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மத மாற்றம் என்பது முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்களின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இயற்கையான மக்கள்தொகை மாற்றத்தைவிட மிகக் குறைவான தாக்கத்தையே கொண்டிருக்கும்.
மத மாற்றத்தால் முஸ்லிம் மக்கள்தொகை 80 லட்சமும், கிறிஸ்துவ மக்கள்தொகை 10 கோடியும் குறையக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2070 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், உலக முஸ்லிம் மக்கள் தொகையில் ஏற்படும் வளர்ச்சியில் பெரும்பகுதி, ஏற்கெனவே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களிலேயே நிகழ்வும் என்று கணிக்கப்பட்டுள்ளது.