
மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார்.
திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்ற அவரின் உடலம் பொது மக்களின் அஞ்சலிக்காக பல்லாவரத்தில் அவரது வீட்டின் அருகே வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் பிறந்து வளந்தவ அவர், படிக்கும்போதே நடனத்தில் ஆர்வம் கொண்டுள்ளார். திருமணத்துக்குப் பிறகு, 1953ல் சென்னைக்குக் குடிபெயர்ந்துள்ளார்.
அவர் வேலை செய்த அலுவலகத்திலேயே இயக்குநர் கே. பாலசந்தரும் பணியாற்றியுள்ளார்.
அவரது நாடக மேடையில் கவனம் ஈர்த்ததால் இயக்குநர் மணி ரத்னம் அவரை ரோஜா படத்தில் அறிமுகப்படுத்தினார். அப்போது அவருக்கு 60 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
400 திரைப்படங்களுக்கு மேலாக சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதில் சதீலீலாவதி, ரிதம், ரோஜா, அந்நியன், வின்னர், பட்டியல் என பல படங்களில் நடித்துள்ளார்.
தொலக்காட்சிகளில் சித்தி, ஆனந்தம், முந்தானை முடிச்சு, வசந்தம் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.