
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் பலியானோரின் எண்ணிக்கை 626 ஆக உயர்ந்துள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எட்டு மாவட்டங்களில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளதாக நேபாள ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
அதிகபட்சமாக சித்வானில் 233 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அதேபோன்று, நவால்பராசி கிழக்கில் 158 சடலங்களும், கோர்காவில் 54, தாடிங்கில் 49, நவால்பராசி மேற்கில் 47, நுவாகோட்டில் 41, தனஹுனில் 31 மற்றும் ரசுவாவில் 13 சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 2,301 பேர் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்டவர்களில் 1,622 பேர் நுவாகோட்டிலிருந்தும், 676 பேர் ரசுவாவிலிருந்தும், மூவர் தாடிங்கிலிருந்தும் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும், காயமடைந்த 140 பேர் தற்போது காத்மண்டில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பலரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகளின் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.