
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பாதிப்புக்குள்ளாகியுள்ள பகுதிகளில் பாடசாலைகளைத் தற்காலிகமாக மூடுவது குறித்து தீர்மானிக்கும் அதிகாரத்தை மாகாணக் கல்விச் செயலாளர்கள் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்குக் கல்வி அமைச்சு வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாகச் சில பகுதிகளில் பாடசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படக்கூடும் என்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அந்தந்தப் பகுதிகளில் பாடசாலைகளைத் திறப்பதா அல்லது தற்காலிகமாக மூடுவதா என்பது குறித்துத் தீர்மானிக்கும் முழு அதிகாரமும் மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நிலவும் பேரிடர் நிலைமை, வெள்ள அபாயம் மற்றும் வீதித் தடைகள் போன்றவற்றை விரிவாக ஆராய்ந்த பின்னரே பாடசாலைகளை மூடுவது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் எனக் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
உள்ளூர் வானிலை நிலைமைகள் மற்றும் பாடசாலை நடவடிக்கைகளைப் பாதுகாப்பாக முன்னெடுக்கக்கூடிய சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் பொருத்தமான தீர்மானங்களை எடுக்க இம்மார்க்கவரையறை வழிவகுக்கும்.