
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
‘கிரிஷ்’ நிதிப் பரிவர்த்தனை வழக்கு தொடர்பிலேயே நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கில் அவருக்கு ஏற்கனவே பிணை வழங்கப்பட்டிருந்த போதிலும், எயார்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக மூன்று பேரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய அவர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.