
கினியாவின் தலைநகர் கொனாக்ரியில் மிகப்பெரிய குப்பை மேடு சரிந்து விழுந்து வீடுகள் மீது விபத்துக்குள்ளானதில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவின் கொனாக்ரி நகரில் உள்ள தார்-எஸ்-சலாம் பகுதியில், கனமழை காரணமாகப் மிகப்பெரிய குப்பைக் கழிவு மேடு ஒன்று திடீரெனச் சரிந்து அருகில் இருந்த வீடுகளின் மீது விழுந்தது.
இந்த விபத்தில் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 22 பேர் காயமடைந்துள்ளதாகவும் அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
இராணுவம் உட்பட பெருமளவிலான மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தில் எக்ஸ்கவேட்டர் இயந்திரங்களைப் பயன்படுத்தி, குப்பைகளுக்குள் சிக்கியுள்ளவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதேவேளை குறித்த பகுதியில் கடந்த 2017-ஆம் ஆண்டிலும் குப்பை மேடு சரிந்து 10 பேர் உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.