
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அரச மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 15 சிசுக்கள் பரிதாபமாக உயிரிழந்தன.
இஸ்லாமாபாத்தில் இயங்கி வரும் பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையின் மகப்பேறு விடுதியின் குளிரூட்டல் சாதனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தத் தீ விபத்து நேரிட்டதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
தீ விபத்து ஏற்பட்ட போது அந்த விடுதியில் 16 சிசுக்கள் தீவிர சிகிச்சையில் இருந்தன.
இதில் ஒரு சிச மட்டும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய 15 சிசுக்களும் தீயில் கருகியும் புகை மூட்டத்தால் மூச்சுத்திணறியும் உயிரிழந்தன.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.