
வெள்ளத்தின் பின்னரான மறுகட்டமைப்பு பணிக்கு பில்லியன் கணக்கில் பணம் தேவைப்படும் என நேபாளத்தின் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
அண்ணளவாக 4 பில்லியன் முதல் 5 பில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படும் என அவர் கூறியுள்ளார்.
இது வெறுமனே மதிப்பீடு மட்டுமே சேதங்கள் குறித்து தொடர்ந்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என நேபாள நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே சர்வதேச செய்தி நிறுவனமான ரொய்டர்ஸ்க்கு தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் ஏற்பட்ட இந்த பாரிய வெள்ளம் வீடுகளை சேதமாக்கியது மட்டுமின்றி பாலங்கள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகளையும் சேதப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.