
சிறையில் உள்ள ஞானசார தேரருக்காகவும், பிக்குமாரின் சாசன உரிமைகளைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டு, மகா சங்கத்தினரின் பங்குபற்றுதலுடன் "சுதந்திரத்திற்கான பாத யாத்திரை" இன்று (10) காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் ஆரம்பமானது.
இந்த பாத யாத்திரை எதிர்வரும் சில நாட்களில் பிரதான பல நகரங்கள் ஊடாக கொழும்பு நோக்கிப் பயணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி:
அக்டோபர் 10: கண்டியிலிருந்து கடகெஹெனிய (கடுகண்ணாவை) வரை அக்டோபர் 11: கடகெஹெனியவிலிருந்து கேகாலை வரை அக்டோபர் 12: கேகாலையிலிருந்து வரக்காபொல வரை அக்டோபர் 13: வரக்காபொலவிலிருந்து நிட்டம்புவ வரை அக்டோபர் 14: நிட்டம்புவவிலிருந்து கடவத்தை வரை அக்டோபர் 15: கடவத்தையிலிருந்து கொழும்பு வரை